Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

24 ரன்களுக்கு 4 விக்கெட்கள்… தங்கள் சொதப்பல் ஆட்டத்தை ஆரம்பித்த தென்னாப்பிரிக்கா!

24 ரன்களுக்கு 4 விக்கெட்கள்… தங்கள் சொதப்பல் ஆட்டத்தை ஆரம்பித்த தென்னாப்பிரிக்கா!
, வியாழன், 16 நவம்பர் 2023 (15:06 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்  செய்ய முடிவெடுத்தது. இதனை அடுத்து தென்னாபிரிக்க அணி களமிறங்கிய நிலையில் முதல் ஓவரிலேயே கேப்டன் டெம்பா பவுமா விக்கெட்டை இழந்தது.

அதிலிருந்து துல்லியமான பந்துகள் மூலம் தாக்குதல் தொடங்கியது ஆஸ்திரேலிய வேகப்பந்து கூட்டணியான ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் இணை. ரன்கள் ஆமை வேகத்தில் நகர, ஆறாவது ஓவரில் டிகாக் தன்னுடைய விக்கெட்டை 3 ரன்களுக்கு பறிகொடுத்தார்.  அதன் பின்னர் வந்த எய்டன் மார்க்ரம் மற்றும் வாண்டர் டஸ்ஸன் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 24 ரன்கள் சேர்ப்பதற்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

ஆஸி தரப்பில் ஸ்டார்க் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர். வழக்கமாக நாக் அவுட் போட்டிகள் என்றால் தென்னாப்பிரிக்கா அணி சொதப்பும். அதே போல இந்த முறையும் ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா அரையிறுதி: மழை வர வாய்ப்பு என தகவல்..!