23 பந்துகளில் அரைசதம்… தனது சாதனையை தானே முறியடித்த இந்திய வீராங்கனை

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (09:10 IST)
காமன்வெல்த் போட்டித் தொடரில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்தை வென்றதன் மூலம் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

காமன்வெல்த் போட்டிகள் தற்பொழுது இங்கிலாந்தில் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் மகளிருக்கான டி 20 கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று நடந்த கால் இறுதி போட்டியில் இங்கிலாந்தை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 23 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய சாதனையை படைத்தார்.

இதன் மூலம் டி 20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற அவரின் முந்தைய சாதனையை அவரே தகர்த்துள்ளார். இதற்கு முன்பு 24 பந்துகளில் அவர் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments