Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“எலோருக்கும் ஒன்றிரண்டு மோசமான போட்டிகள் வரும்…” ஆட்டநாயகன் குறித்து கேப்டன் கருத்து

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (08:33 IST)
நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்தியா வென்றதை அடுத்து டி 20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி 44 ரன்கள் அடித்தார் 

இதனையடுத்து 192 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.1 ஓவரில் 132 இரண்டு ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து இந்திய 59 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றதோடு 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “களத்தில் சூழல் எளிதாக இல்லை. ஆனால் எங்கள் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆவேஷ் கானின் திறமையை புரிந்துகொண்டோம். எல்லோருக்கும் ஒரு சில மோசமான போட்டிகள் அமையும். ஆனால் இளைஞர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments