Publish Date: Thu, 02 Feb 2023 (08:28 IST)
Updated Date: Thu, 02 Feb 2023 (08:44 IST)
நியுசிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது.
நியுசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி 20 தொடரில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய கில் 126 ரன்கள் சேர்த்து அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் இருந்தார்.
இந்த போட்டியில் சதமடித்த கில் டி 20 போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் சேர்த்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். மேலும் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 என மூன்று வடிவிலான போட்டிகளிலும் சதமடித்த மிகக்குறைந்த வயதுடைய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.