அணிக்கு விஸ்வாசமாக இருக்கவேண்டும்… ஹர்திக் பாண்ட்யாவை சீண்டிய ஷுப்மன் கில்?

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (07:01 IST)
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்ட்யா, இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியால் மீண்டும் டிரேடிங் முறையில் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி பாண்ட்யாவுக்கு நன்றி தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இப்போது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக குஜராத் டைட்டன்ஸ் அணி அறிவித்துள்ளது.

இந்நிலையில் கேப்டன் பொறுப்பேற்றுள்ள ஷுப்மன் கில் “ஒரு அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றுக் கொள்ளும் போது பல பொறுப்புகள் நம் மேல் விழும். அர்ப்பணிப்புடன் இருப்பது, கட்டுப்பாடு மற்றும் அணிக்கு விஸ்வாசமாக இருப்பது போன்றவை ஒரு கேப்டனின் முக்கியமான தேவையாக நான் கருதுகிறேன்.” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து ஹர்திக் பாண்ட்யாவின் செயலை சீண்டுவது போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments