Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

vinoth
சனி, 6 ஜூலை 2024 (08:08 IST)
உலகக் கோப்பை தொடர் முடிந்த நிலையில் தற்போது இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரரான சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடரில் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளார்கள். ருத்துராஜ் கெய்க்வாட் மூன்றாவது வீரராக களமிறங்கவுள்ளார். இந்நிலையில் கேப்டனாக செயல்படுவது குறித்து சுப்மன் கில் நம்பிக்கையோடு பேசியுள்ளார்.

அதில் “ இதற்கு முன்னர் நான் டி 20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி இருக்கிறேன். அதனால் இப்போது அந்த இடத்திலேயே விளையாட உள்ளேன். ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்ட போது நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.  கேப்டனாக கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் எட்டிய உயரத்தை தொடுவதே மிகப்பெரிய சாதனை. ஆனால் அதை இலக்காகக் கொண்டால் கூடுதல் அழுத்தமே கிடைக்கும். ஒரு வீரர் எங்கு இருக்கவேண்டும் என்பதை மற்றவரோடு ஒப்பிட்டுக்கொள்ளாமல் முடிவு செய்யவேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இருந்து முழுவதும் விலகுகிறாரா ஹேசில்வுட்?

ஃபாலோ ஆனைத் தவிர்த்ததைக் கொண்டாடிய கம்பீரும் ரோஹித்தும்… என்ன கொடும சார் இது?

ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.. 10 விக்கெட்டில் அசத்தும் பும்ரா-ஆகாஷ் தீப்

வெற்றியுடன் விடைபெற்றார் நியுசிலாந்தின் டிம் சவுத்தீ!

உணவு இடைவேளையின் போது பயிற்சி மேற்கொண்ட கோலி…!

அடுத்த கட்டுரையில்
Show comments