ஐந்தாவது டெஸ்ட்டில் பும்ரா இருப்பாரா?... ஷுப்மன் கில் கொடுத்த அப்டேட்!

vinoth
வியாழன், 31 ஜூலை 2025 (08:21 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்து வரும் ‘ஆண்டர்சன் –டெண்டுல்கர்’ தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.  இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தொடர் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கத்தில் உள்ளது.

இன்று ஐந்தாவது டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டியில் விளையாடவுள்ள 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட நான்கு வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர். இது இந்திய அணிக்கு சாதகமான அம்சமாக அமைந்துள்ளது.

இது பற்றி பேசியுள்ள ஷுப்மன் கில் “பென் ஸ்டோக்ஸ் இல்லாதது இங்கிலாந்து அணிக்குப் பின்னடைவுதான். மைதானம் பசுமையாக உள்ளதால் பும்ரா விளையாடுவாரா மாட்டாரா என்பது குறித்து போட்டி நாளன்று முடிவு செய்யப்படும்” எனக் கூறியுள்ளார். முன்னதாக இந்த டெஸ்ட்டில் பும்ரா விளையாட மாட்டார் என தகவல்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபிட்னெஸின் குருவே கோலிதான் – விமர்சனங்களுக்கு முன்னாள் வீரர் பதில்!

உலகக் கோப்பை தகுதி சுற்றில் அதிக கோல்கள்… ரொனால்டோ படைத்த சாதனை!

டெல்லி கேப்பிடல்ஸில் இருந்து விலகுகிறாரா கே எல் ராகுல்?... ட்ரேட் செய்ய ஆர்வம் காட்டும் அணி!

14 வயதில் துணை கேப்டன் பதவியில் வைபவ் சூர்யவன்ஷி.. ரஞ்சி டிராபியில் 280 ஸ்ட்ரைக் ரேட்

ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் என்னால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா?... ஷமி ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments