Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒருநாள் போட்டிகளில் முதல் சதம்… சுப்மன் கில் அதிரடி… இந்திய அணி ஸ்கோர் நிலவரம்!

ஒருநாள் போட்டிகளில் முதல் சதம்… சுப்மன் கில் அதிரடி… இந்திய அணி ஸ்கோர் நிலவரம்!
, திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (16:07 IST)
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று முழு வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து இன்று மதியம் தொடங்கிய மூன்றாவது போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணியில் மூன்றாவதாகக் களமிறங்கிய சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் தனது முதல் சர்வதேச சதத்தை அடித்துள்ளார். தற்போது வரை இந்திய அணி 47 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 267 ரன்கள் சேர்த்து ஆடி வருகிறது. கில் 89 பந்துகளில் 119 ரன்களோடு விளையாடி வருகிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3வது ஒருநாள் போட்டி: டாஸ் வென்றது இந்திய அணி