அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த கில் & ரோஹித் ஷர்மா!

vinoth
வெள்ளி, 8 மார்ச் 2024 (13:02 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தரம்சாலா மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது என்பதை பார்த்தோம்.

இந்திய பவுலர்களான குல்தீப் மற்றும் அஸ்வின் ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியை 218 ரன்களில் ஆல் அவுட் ஆக்கினர். குல்தீப் ஐந்து விக்கெட்களையும் அஸ்வின் நான்கு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதையடுத்து ஆடிய இந்திய அணியில் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர்.57 ரன்கள் சேர்த்து ஜெய்ஸ்வால் அவுட் ஆன நிலையில் கில்லுடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இருவரும் அபாரமாக ஆடி அடுத்தடுத்து சதமடித்தனர்.

பெரிய ஸ்கோரை நோக்கி செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. தற்போது தேவ்தத் படிக்கல் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 313 ரன்கள் சேர்த்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments