சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை மூன்றாவது முறையாக வென்றது. ஆனால் சமீபத்தில் நடந்த மெஹா ஏலத்தில் அவரை கொல்கத்தா அணி தக்கவைக்கவில்லை.
அதே போல சர்வதேச போட்டிகளிலும் அவருக்கு தற்போது வாய்ப்புகள் அரிதாகி வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதன் பிறகு அவருக்கு போதுமான வாய்ப்புகள் அணியில் கிடைக்கவில்லை. டி 20 உலகக் கோப்பை தொடரில் கூட அவர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் இப்போது அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டு அந்த அணிக்குக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கொலக்த்தா அணியில் இருந்து விலகியது குறித்து பேசியுள்ள அவர் “ஐபிஎல் கோப்பையை வென்றபோது அணி சார்பாக என்னை தக்கவைப்பது சம்மந்தமாகப் பேசினார்கள். அதன் பிறகு எந்த தகவல் பரிமாற்றமும் இல்லை. வீரர்களை தக்கவைக்கும் கெடு தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக பின்னர் பேசினார்கள். அங்கு ஏதோ சரியாக இல்லை என்பது தெரிந்தது. அதனால் நான் விலகும் முடிவை எடுத்தேன்” எனக் கூறியுள்ளார்.