Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நமக்கு இதெல்லாம் தேவையா ?… சன் கிளாஸோடு பேட் செய்து டக் அவுட் ஆன ஸ்ரேயாஸ்- ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

vinoth
சனி, 14 செப்டம்பர் 2024 (06:37 IST)
இந்திய அணியில் குறிப்பிடத்தக்க நடுவரிசை பேட்ஸ்மேனாக வளர்ந்து வந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் அவருக்கு அடிக்கடி ஏற்படும் காயம் மற்றும் அவரின் சீரற்ற ஆட்டம் ஆகியவற்றால் இப்போது அவரின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போதைக்கு அவருக்கு இந்திய அணியில் ஒருநாள் அணியில் மட்டும்தான் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

டெஸ்ட் மற்றும் டி 20 அணியில் இடம்பிடிக்க அவர் கடுமையாக உழைத்து தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் தற்போது நடந்து வரும் துலிப் கோப்பை தொடரில் இந்தியா டி அணிக்காக ஆடி வரும் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இந்தியா ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பேட் செய்ய வரும் போது சன் கிளாஸ் அணிந்து வந்தார். வழக்கமாக வீரர்கள் பீல்ட் செய்யும் போதோ அல்லது பந்து வீசும்போதோ சன் கிளாஸ் அணிவார்கள். ஆனால் ஸ்டைலாக சன் கிளாஸ் அணிந்து பேட் செய்ய வந்த ஸ்ரேயாஸ் 7 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து இப்போது அவர் சன் கிளாஸ் அணிந்து வந்தது இணையத்தில் கடுமையான ட்ரோல்களை எதிர்கொண்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவாஜா, ஸ்மித் அதிரடி சதம்.. இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அபாரம்..!

ரோஹித் இதயத்தில் இருந்து ரஞ்சி போட்டியில் விளையாடினாரா?... சுனில் கவாஸ்கர் காட்டம்!

மீண்டும் கிரிக்கெட் களத்தில் டிவில்லியர்ஸ்.. மகனின் ஆசையை நிறைவேற்ற எடுத்த முடிவு!

கோலி களமிறங்குவதால் ரஞ்சிக் கோப்பை போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்யும் ஜியோ!

டிவில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் தவறான அணிகளில் விளையாடிவிட்டார்.. முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments