Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை மாற்றியமைத்தவர் கோலிதான்… முன்னாள் ஜாம்பவான் புகழாரம்!

vinoth
வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (13:30 IST)
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரிக்கெட்டின் முகமாக ஒரு வீரர் இருப்பார். முந்தைய தலைமுறையில் இருந்து கிரிக்கெட்டின் முகம் இன்னொரு வீரருக்கு மாறும். அப்படி சச்சின் தோனிக்குப் பிறகு உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி.

தற்போது 35 வயதாகும் கோலி இன்னும் எத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்தாலும், அவரின் உடல்தகுதியை வைத்துப் பார்க்கும் போது இன்னும் 5 ஆண்டுகள் அவரால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும் என தோன்றுகிறது.

இந்நிலையில் கோலி குறித்துப் பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை மாற்றியமைத்தவர் விராட் கோலிதான். அவர் தலைமையில்தான் இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஊக்கத்தைப் பெற்றனர். அவர் தலைமையில் இந்திய அணி பிரிஸ்பேனில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை வென்றது. அவர் தலைமையில்தான் ஏராளமான நட்சத்திர வீரர்கள் அணிக்குள் உருவாகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments