Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசியக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழக்கும் இரண்டு இந்திய வீரர்கள்!

ஆசியக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழக்கும் இரண்டு இந்திய வீரர்கள்!
, வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (14:19 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி அகமதாபாத்தில் நடந்த போது, இந்திய அணியின் நடுவரிசை வீரர் ஸ்ரேயாஸ் காயமடைந்து போட்டியில் இருந்து விலகினார். அதையடுத்து  அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதே போல ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய கே எல் ராகுலும் கடந்த சில மாதங்களாக எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. இப்போது அவர் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் விரைவில் தொடங்கவுள்ள ஆசியக் கோப்பைக்கான அணியில் இடம்பெற மாட்டார்கள் என தகவல்கள் பரவி வருகின்றன. இருவரும் இன்னும் காயத்தில் இருந்து குணமாகாததே அதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்ப உலகக் கோப்பை தொடருக்கு இவர்தான் விக்கெட் கீப்பரா? ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த புகைப்படம்!