Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

Prasanth Karthick
ஞாயிறு, 16 பிப்ரவரி 2025 (10:59 IST)

இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக வலுவற்ற தன்மையில் இயங்கும் நிலையில் கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என ரவிச்சந்திரன் அஷ்வின் பேசியுள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில காலமாக டெஸ்ட்டில் மோசமான தோல்வியடைந்த நிலையில், இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளது. ஆனாலும் இந்திய அணியின் ஃபார்ம் கேள்விக்குறியதாகவே இருந்து வருகிறது. அணியின் ஸ்டார் ப்ளேயரும் கேப்டனுமான ரோகித் சர்மா கடந்த பல ஆட்டங்களாக சொற்ப ரன்களில் அவுட்டாகி வருவது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

 

ALSO READ: நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் “இந்திய கிரிக்கெட்டில் சில விஷயங்களை இயல்பாக்க வேண்டும். அணிக்கு சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை நாம் ஊக்குவிக்கக்கூடாது. எதிர்காலத்தில் இவற்றை இயல்பாக்க வேண்டும். நாம் நடிகர்களோ அல்லது சூப்பர் ஸ்டார்களோ அல்ல. விளையாட்டு வீரர்கள். பொதுமக்கள் ஒப்பிட்டு பார்க்கக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும்” என பேசியுள்ளார்.

 

இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட வீரருக்கு அதிக ரசிகர்களும், சூப்பர் ஸ்டார் பிம்பமும் இருப்பதாலேயே அவர் சரியாக ஆடாவிட்டாலும் தொடர்ந்து அணியில் இருப்பது குறித்து ரவிச்சந்திரன் அஷ்வின் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“ஸ்ட்ரைக் ரேட் எல்லாம் முக்கியமே இல்ல..” கோலிக்கு ஆதரவாகப் பேசிய சேவாக்!

‘இன்னும் நீ செல்லவேண்டிய தூரம் நிறையவுள்ளது’ … தன் சாதனையை முறியடித்த சூர்யவன்ஷியைப் பாராட்டிய யூசுப் பதான்!

நடராஜனை அணியில் எங்கே வைப்பதென்று சொல்லுங்கள்?.. டெல்லி அணி ஆலோசகர் பீட்டர்சன் கேட்கும் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments