Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இன்னும் சில ஆண்டுகள் நான் விளையாடி இருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும்…” அக்தர் வெளியிட்ட வீடியோ

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (09:01 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தற்போது கால்களில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

பாகிஸ்தானின் சோயிப் அக்தர் 161.3 கிமீ வேகத்தில் பந்துவீசி இதுவரை அதிக வேகத்தில் பந்து வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை வைத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக அவர் விளையாடிய காலம் முழுவதும் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமலேயே விளையாடினார். கடந்த 2011 ஆம் ஆண்டு இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் இப்போது வர்ணனையாளராகவும் விமர்சகராகவும் செயல்பட்டு வரும் தற்போது கால்களில் முட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “ கடந்த 11 ஆண்டுகளாகவே நான் கால்களில் வலியுடன் அவதிப்பட்டு வந்தேன். ஒரு வேகப்பந்து வீச்சாளராக இருப்பதின் சோகம் இதுதான். நான் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி இருக்கலாம். ஆனால் நான் விளையாடி இருந்தால் இப்போது சக்கர நாற்காலியில்தான் இருந்திருப்பேன். அதனால் ஓய்வை அறிவித்தேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதத்தை மிஸ் செய்த கே.எல்.ராகுல்.. சதத்தை நோக்கி கில்.. டிரா செய்யுமா இந்தியா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டை இழந்த இந்தியா.. சுதாரித்து விளையாடும் கே.எல்.ராகுல், கில்..!

ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141.. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து இமாலய ஸ்கோர்..!

பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம்: முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments