இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ஷிகார் தவான். கடந்த 2013 ல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டடியில் அறிமுகமானார். அதன் பிறகு ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். இதுவரை 167 ஒரு நாள் போட்டிகளிலும், 6793 ரன்களும்,34 டெஸ்ட் போட்டிகளில் 2315 ரன்களும், 217 ஐபிஎல் போட்டிகளில் விளையாட்டு 6616 ரன்களும் அடித்துள்ளார்.
இவர் 2012 ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆயிஷா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்துப் பெற்றவர். மேலும் தவானை விட வயதில் மூத்தவர். இவர்களின் திருமண வாழ்க்கை 9 ஆண்டுகள் நீடித்த நிலையில் 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இத்தம்பதியர்க்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவரது பெயர் ஜோராவர். தற்போது ஆயிஷா முகர்ஜியுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இப்போது தவான் மீண்டும் காதலில் விழுந்துள்ளார். ஐயர்லாந்தைச் சேர்ந்த சோஃபி ஷைன் என்பவரைக் காதலிப்பதாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.