Publish Date: Mon, 27 Mar 2023 (08:20 IST)
Updated Date: Mon, 27 Mar 2023 (08:08 IST)
இந்திய ஒருநாள் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் கடந்த சில மாதங்களாகவே இடமளிக்கப்படவில்லை. தொடர்ந்து சீரான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வரும் நிலையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு இஷான் கிஷான் சமீபத்தில் சிறப்பாக விளையாடியது காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்திய அணிக்காக பல வெளிநாட்டு தொடர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள தவான் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் வரையாவது விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது பிசிசிஐ எடுத்துள்ள முடிவு அநியாயமானது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தற்போது பேசியுள்ள தவான் “ நான் தேர்வுக்குழுவில் இப்போது இருந்தால் சுப்மன் கில்லுக்குதான் முன்னுரிமை வழங்குவேன். அவர் இப்போது சிறந்த பார்மில் விளையாடி வருகிறார். அதனால் அவர்தான் சிறந்த தேர்வாக இருப்பார்” எனக் கூறியுள்ளார்.