தோனி கிடைக்க குடுத்து வெச்சிருக்கணும்! – விரேந்தர் சேவாக் நெகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (13:48 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகியுள்ள நிலையில் அதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2008 முதலாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவரது தலைமையிலான சிஎஸ்கே அணி இதுவரை 4 முறை ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு முதல் ஜடேஜா அணி கேப்டன் பதவியை வகிப்பார் என்றும் தோனி விளையாட்டு வீரராக மட்டும் பங்கேற்பார் என்றும் சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தோனி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் “தோனி போன்றதொரு கேப்டன் கிடைக்க சென்னை அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். தோனி – சென்னை அணி இடையேயான பிணைப்பு இனியும் தொடரும். சென்னை அணி, மக்கள் மற்றும் ரசிகர்களிடம் தோனி பெற்றுள்ள அன்பு அபாரமானது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி.. நியூசிலாந்து அபார வெற்றி..!

சூதாட்ட புகார் எதிரொலி.. முக்கிய கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை.. 14 நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவு..!

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

10 ஓவர்களில் சோலியை முடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மாவின் வரலாற்று சாதனை..!

உலகக்கோப்பையை தவிர்ப்போம் என கூறிவிட்டு அணியை அறிவித்த பாகிஸ்தான்.. பூச்சாண்டி காட்டுகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments