Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

vinoth
செவ்வாய், 2 ஜூலை 2024 (11:59 IST)
இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சி இன்னும் இந்திய ரசிகர்கள் ஓயவில்லை. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி  இந்தியா நிர்ணயித்த 176 ரன்கள் இலக்கைத் துரத்தியது. விக்கெட்கள் விழுந்தாலும் கிளாசன் அதிரடியாக ஆடி இலக்கை தொடும் தூரத்துக்குக் கொண்டுவந்துவிட்டார். அவர் அதிரடியால் தென்னாப்பிரிக்கா அணிக்கு கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் அதன் பிறகு இந்திய பவுலர்களின் அசத்தலான பவுலிங்காலும் தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்களை இழந்ததாலும் அந்த அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

அந்த அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த டேவிட் மில்லர் கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று எல்லைக் கோட்டருகே சூர்யகுமாரின் ஒரு அபாரமான கேட்ச்சால் அவுட்டானார். ஆனால் கேட்ச் சரியான கேட்ச் இல்லை என்றும், அவர் கேட்ச் பிடித்த இடத்தில் பவுண்டரி லைன் குஷன் விலகி இருந்த அச்சு தெரிவதாகவும் சில ரசிகர்கள் விமர்சனம் செய்துவந்தனர். இதில் இந்திய ரசிகர்களும் அடக்கம்.

இந்நிலையில் இந்த கேட்ச் குறித்து பேசியுள்ள தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஷான் பொல்லாக் “சூர்யகுமார் பிடித்த கேட்சில் எந்த தவறும் இல்லை. அவர் பிடித்த அந்த கேட்ச் சரியான கேட்ச்தான். அதுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது” எனக் கூறி சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குணமாகாத காயம்..? இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் விலகல்?

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments