Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

RCB –க்கு பலம் சேர்க்க அணியில் இணைகிறாரா ஷமர் ஜோசப்?

RCB –க்கு பலம் சேர்க்க அணியில் இணைகிறாரா ஷமர் ஜோசப்?

vinoth

, புதன், 7 பிப்ரவரி 2024 (07:39 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

கடந்த 2023 ஆம் ஆண்டு சீசனில் கூட ஆர் சி பி அணி சிறப்பாக விளையாடியும் ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு எப்படியும் ஆர் சி பி அணி கப் அடித்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது. அதற்கேற்றார் போல அடுத்த சீசனில் விளையாட கேமரூன் க்ரீன், அல்ஜாரி ஜோசப் மற்றும் யாஷ் தயால் ஆகியோரை ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தைய சென்சேஷனான வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷமர் ஜோசப்பை ஆர் சி பி அணி தங்கள் அணிக்காக 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குப் பதில் டாம் கரணை அணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஷமர் ஜோசப் சிறப்பாக பந்துவீசி கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடருக்கு நடுவே வெளிநாடு சென்று ஓய்வெடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!