Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிதான் இந்திய அணியின் முதுகெலும்பு… பாகிஸ்தான் வீரர் புகழாரம்!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (14:48 IST)
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு மையமாக உள்ளார். தொடர்ந்து அணிக்காக சிறப்பான பந்துவீச்சை வீசிவரும் அவர் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்.

சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்களைக் கைப்பற்றி நிலைகுலைய வைத்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை பற்றி பேசியுள்ள ஷாகீன் அப்ரிடி “விராட் கோலி ஒரு லெஜண்ட் பிளேயர். அவர்தான் இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பு. ரோஹித் விக்கெட் எடுத்ததை விட நான் கோலியின் விக்கெட்டை எடுத்ததையே பெரியளவில் கொண்டாடுவேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!

IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments