Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“இந்திய அணிக்கு போகாதீங்க… எங்க கூடவே இருங்க”- கம்பீருக்கு ப்ளாங்க் செக் கொடுத்த ஷாருக் கான்?

vinoth
திங்கள், 27 மே 2024 (07:52 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனால் அவர் தற்போது நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடவில்லை. தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வந்த அவர் தற்போது அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். அவர் வந்த பின்னர் அந்த அணி புத்துணர்ச்சி பெற்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் இறுதியோடு முடிவடைகிறது. அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை என சொல்லப்படும் நிலையில், அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிசிசிஐயின் லிஸ்ட்டில் கவுதம் கம்பீரும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் இப்போது வரை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை.

இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக் கான் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தங்கள் அணிக்கு ஆலோசகராக செயல்பட சொல்லி கம்பீரை வற்புறுத்தி வருகிறாராம். இதற்காக அவர் பிளாங்க் செக் ஒன்றையும் கம்பீருக்குக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை கம்பீர் இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அவரால் கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக செயல்பட முடியாது என்பதால் ஷாருக் கான் இந்த நெருக்கடியை அவருக்குக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யுவ்ராஜ் சிங்கின் பயோபிக் குறித்து அப்டேட் கொடுத்த தந்தை யோக்ராஜ் சிங்!

இந்திய அணிக்குத் தற்காலிக பயிற்சியாளர் ஆகும் விவிஎஸ் லஷ்மண்!... அப்போ கம்பீர்?

டி 20 கிரிக்கெட்டில் கோலியின் சாதனையை சமன் செய்த சூர்யகுமார் யாதவ்!

பும்ராவை ஸ்மார்ட்டாக பயன்படுத்த வேண்டும்… வெற்றிக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா பேச்சு!

மிடில் ஓவர்களில் அட்டாக் செய்து விளையாடுவதுதான் என் ஸ்டைல்… ஆட்டநாயகன் சூர்யகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments