Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒவ்வொரு வீரருக்கும் இது கனவு… இந்திய அணியில் இடம்பிடித்த வீரர் மகிழ்ச்சி!

ஒவ்வொரு வீரருக்கும் இது கனவு… இந்திய அணியில் இடம்பிடித்த வீரர் மகிழ்ச்சி!
, வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (09:17 IST)
ஜிம்பாப்வே செல்லும் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் கோஹ்லி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இடம்பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த இளம் அணிக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்த தொடருக்கான அணியில் கே எல் ராகுல் திடீரென்று சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஷிகார் தவான் தற்போது துணைக் கேப்டனாக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த தொடரில் இடம்பெற்ற வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகினார். அவருக்குப் பதில் தற்போது RCB அணிக்காக விளையாடிய ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இந்திய அணிக்காக அறிமுகமாகும் முதல் தொடர் இதுவாகும்.

அணியில் இணைந்துள்ளது குறித்து பேசியுள்ள ஷபாஸ் “கிரிக்கெட் விளையாடும் அனைவருக்குமே தங்கள் நாட்டு தேசிய அணியில் விளையாடுவது கனவு போன்றது. உள்ளூர் அணியில் எப்படி அணிக்குப் பங்களித்தேனோ அதுபோல இந்திய அணியிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பங்களிப்பேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷேன் வார்னுடன் நான் ரகசிய உறவில் இருந்தேன்… உலகின் அழகான பாட்டி உடைத்த சீக்ரெட்