Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அணியைக் காப்பாற்றிய இரண்டு வீரர்கள்… இறுதியில் கோட்டை விட்ட இந்தியா!

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (15:25 IST)
இன்று மதியம் தொடங்கிய இந்த போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா வென்றதை அடுத்து அவர் பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி இன்னும் களமிறங்கிய விளையாடி வருகிறது.

முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீச அந்த ஓவரில் ஒர் ரன் மட்டும் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் இரண்டாவது ஓவரை வீச வந்த இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் எல்பிடபுள்யு முறையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை முதல் பந்திலேயே வெளியேற்றினார். இதன் மூலம் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். பின்ன நான்காவது ஓவரில் அவர் முகமது ரிஸ்வானையும் அவுட்டாக்கினார்.

பின்னர் நிலைத்து நின்று ஆடிய பாகிஸ்தான் அணியில் இப்திகார் அகமது அதிரடியாக விளையாடி 51 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அதன்பின்னர் வந்த ஹைதர் அலி மற்றும் சதாப் கான் ஆகியோரும் அடுத்தடுத்து அவ்ட் ஆக அந்த அணியின் ஷான் மசூத் மட்டும் நிலைத்து நின்று அரைசதமடித்தார். இதனால் அந்த அணி இறுதியில் 8 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் சேர்த்தது.

தொடக்கத்திலேயே விக்கெட்களை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணியை இப்திகார் மற்றும் ஷான் மசூத் ஆகிய இருவர் மட்டும் நிலைத்து நின்று விளையாடி கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினர். அதே போல பாகிஸ்தான் அணியின் டெய்ல் எண்ட் பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேவலமான பேட்டிங்.. மைதானத்தை விட்டு வெளியேறும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments