Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

vinoth
செவ்வாய், 21 மே 2024 (07:35 IST)
நடந்துவரும் ஐபிஎல் சீசனில் சி எஸ் கே அணி ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடினாலும் கடைசி கட்டத்தில் சொதப்பி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. சி எஸ் கே அணியைப் பொறுத்தவரை ரசிகர்கள் தோனி பேட்டிங் செய்வதைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் அளவுக்கு சி எஸ் கே வெற்றிக்கு ஆர்வமாக இருக்கவில்லையோ என்று தோன்றுகிறது. இந்த தோல்வியால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன.

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணிகளில் ஒன்றாக சிஎஸ்கே உள்ளது. அதற்குக் காரணம் அந்த அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிதான். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியபோதில் இருந்து அவர் சி எஸ் கே அணிக்காக விளையாடி வருகிறார்.

ஆனால் முதல் சீசனில் சி எஸ் கே நிர்வாகம் சேவாக்கைதான் தங்கள் கேப்டனாக நியமிக்க விரும்பியதாம். அப்போது அணி நிர்வாகியாக இருந்த வி பி சந்திரசேகர் , சேவாக்கை தொடர்பு கொண்டு “உங்களை எங்கள் அணிக்காக எடுத்துக் கேப்டனாக்கலாம் என்றிருக்கிறோம். நீங்கள் டெல்லிக்காக ஐகான் ப்ளேயராக செல்லாதீர்கள்” என்று கூறினாராம். ஆனால் சேவாக் தனது சொந்த மாநில அணிக்கு ஐகான் ப்ளேயராக ஒப்பந்தம் செய்துகொண்டுவிட்டார். இல்லைஎயென்றால் அவர் சிஎஸ்கே அணிக்குக் கேப்டனாகி இருப்பார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

24 பந்துகளில் 20 டாட் பந்துகள்… ஆப்கானிஸ்தான் சோலியை முடித்த பும்ரா!

சூப்பர் 8 போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெற்றி.. சூர்யகுமார் யாதவ் அபாரம்..!

வெளிநாட்டு வீரரை தன் பயிற்சியாளர் குழுவுக்குள் இணைக்க ஆசைப்படும் கம்பீர்!

ஜிம்பாப்வே தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு… பிசிசிஐ முடிவு!

கம்பீர் மட்டுமில்லை, இந்த தமிழக வீரரும் விண்ணப்பித்துள்ளாரா? இந்திய அணிக்கு யார் அடுத்த பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments