Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியை அவரது அறைக்கே சென்று சந்தித்த கோலி… சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!

vinoth
செவ்வாய், 21 மே 2024 (07:27 IST)
கடந்த 18 ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்தது பெங்களூர் அணி. அந்த போட்டியில் சிஎஸ்கே தனது இறுதி ஓவரில் இருந்தபோது 6 பந்துகளில் 17 ரன்கள் அடித்தால் ப்ளே ஆப் வாய்ப்பு உறுதியாகிவிடும் என்று இருந்தது. அப்போது யஷ் தயால் பந்து வீச முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தோனி இரண்டாவது பந்தில் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் எட்டக்கூடிய இலக்கையும் எட்ட முடியாமல் சிஎஸ்கே தோல்வியடைந்தது.

இந்நிலையில் போட்டி முடிந்ததும், அவர் ஆர் சி பி வீரர்களுக்குக் கைகூட கொடுக்காமல் சென்றுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை எழுப்பியது. ஆனால் தோனி ஆர் சி பி வீரர்களோடு கைகுலுக்க வரிசையில் காத்திருந்ததாகவும், அவர்கள் நீண்ட நேரம் கொண்டாட்டத்திலேயே ஈடுபட்டதால்தான் அவர் ஓய்வறைக்கு திரும்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விராட் கோலி தோனியின் அறைக்கே சென்று நேரடியாக அவரை சந்தித்து கைகுலுக்கியதாகவும், அப்போது கோப்பையை வெல்ல தோனி கோலிக்கு வாழ்த்தியதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments