Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலியும் பார்ட்டிகளில் ஆர்வமாக இருந்தார்… ஆனால்?- சேவாக் சொன்ன சீக்ரெட்!

Advertiesment
கோலியும் பார்ட்டிகளில் ஆர்வமாக இருந்தார்… ஆனால்?- சேவாக் சொன்ன சீக்ரெட்!
, புதன், 26 ஏப்ரல் 2023 (08:10 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் ஆக்ரோஷமான இளம் வீரராக அறிமுகம் ஆகி, தனது அசுரத்தனமான ஃபார்மால் இன்று உலகின் தலைசிறந்த கிரிக்கெட்டர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார் கோலி. சமீபத்தில் சில ஆண்டுகளாக தடுமாறிய கோலி, மீண்டும் பழைய பார்மை மீட்டெடுத்துள்ளார். இந்நிலையில் கோலியிடம் ஏற்பட்ட மாற்றம் பற்றி சேவாக் பேசியுள்ளார்.

அவரது பேச்சில் “கோலியும் இந்திய அணிக்குள் அறிமுகமாகும் போது மற்ற இளம் வீரர்களைப் போல பார்ட்டி உள்ளிட்ட விஷயங்களில் ஆர்வமாக இருந்தார். ஆனால் அவரிடம் இருந்த ஒரு வித்தியாசம் என்னவென்றால், இந்திய அணியில் தான் நீண்டகாலம் விளையாட வேண்டும் என்றால் அதற்கு ஒழுக்கம் தேவை என்பதை அவர் உணர்ந்துகொண்டார்.” என பேசியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்கக் காரரான சேவாக், மனதில் பட்ட கருத்துகளை தைரியமாகக் கூறி வருபவர். கடந்த 2017 ஆம் ஆண்டு, அவர் ஓய்வு பெற்ற அவர் இப்போது கிரிக்கெட் வர்ணனை உள்ளிட்டவற்றி ஈடுபட்டுள்ளார். மிகவும் நகைச்சுவையாக பேசும் திறன்கொண்ட சேவாக், அவரது பேட்டிங்கை போலவே பேச்சுக்கும் ரசிக்கப்படுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்-2023: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டுமா?