சேவாக் பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு வரிக்கொண்ட விண்ணப்ப படிவத்தை அனுப்பியுள்ளார். இதை பார்த்த பிசிசிஐ அவரிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியுடன் முடிவடைகிறது. தற்போது அனில் கும்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அனில் கும்ளே சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர் மீண்டும் விண்ணபிக்க பிசிசிஐ சிறப்பு சலுகை அளித்துள்ளது.
இதையடுத்து இந்த பதவிக்கு ஏராளமானோர் விண்ணபித்து வருகின்றனர். இந்த பயிற்சியாளர் பதவிக்கு பிசிசி தலைவர் ஒருவர் சேவாக்கிடம் விண்ணபிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அதன்பேரில் சேவாக் விண்ணபித்துள்ளார். சேவாக் அனுப்பி விண்ணப்பத்தில் அவர் எந்த தகவலும் குறிப்பிடவில்லை. இரண்டே வரிகளில் தனது ஸ்டைலில் விண்ணப்பித்துள்ளார்.
இதுகுறித்து பிசிசிஐ தலைவர் ஒருவர் கூறியதாவது:-
சேவாக் பயோ டேட்டா கூட அனுப்பவில்லை. அவரிடம் விரிவான தகவல்களை கோரி இருக்கிறோம். ஐபிஎல் போட்டிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராகவும் பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கிறேன். தற்போது இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களுடனும் விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு என்று மட்டுமே விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார், என்று தெரிவித்தார்.