Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அக்தர் ஓடிவந்து த்ரோ செய்வார்”… சேவாக்கின் சர்ச்சைக் கருத்து!

Webdunia
சனி, 21 மே 2022 (16:35 IST)
பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் குறித்து சேவாக் சொன்ன கருத்து கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான சேவாக் தன் கிரிக்கெட் காலத்தில் பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். ஆனால் இப்போது அவர் சொல்லும் பல கருத்துகள் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்குகின்றன. அந்தவகையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் ஓடிவந்து த்ரோ செய்வார். அவர் கை எங்கு மடங்குகிறது என்று தெரியாததால் அவர் பந்தைக் கணிப்பது கடினம் என்று கூறினார். இந்த கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

சேவாக்கின் இந்த கருத்துக்குப் பதிலளித்த அக்தர் “சேவாக் என் நண்பர்தான். அவர் விளையாட்டாக சொன்னாரா இல்லை சீரியஸாக சொன்னாரா என்று தெரியவில்லை. அவருக்கு ஐசிசி யைவிட அதிகமாக தெரியுமா. தெரிந்தால் சொல்லலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டி20 உலகப்கோப்பை..! முதல் போட்டியில் கனடாவை பந்தாடிய அமெரிக்கா..!!

ரோஹித்தை பார்க்க க்ரவுண்டுக்குள் ஓடிய ரசிகர்! அடித்து துவைத்த அமெரிக்க போலீஸ்! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வார்ம் அப் மேட்ச்சில் பங்களாதேஷை பந்தாடிய இந்தியா! – 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் கோலி மிஸ்ஸிங்!

யார் இந்த அஸாம் கான்… 100 கிலோ எடையோடு சர்வதேசக் கிரிக்கெட்டில் தாக்குப் பிடிப்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments