Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்த வெஸ்ட் இண்டீஸ்!

Prasanth Karthick
வியாழன், 13 ஜூன் 2024 (10:55 IST)
உலக கோப்பை டி20 போட்டிகளில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.



உலக கோப்பை டி20 போட்டிகளின் லீக் ஆட்டங்கள் அமெரிக்காவில் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி அமெரிக்காவுடன் இணைந்து நடத்துகிறது. இந்த போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி டீம்-சியில் ஆப்கானிஸ்தான், உகாண்டா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளுடன் விளையாடி வருகிறது.

ஏற்கனவே 2 போட்டிகளை வென்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் தற்போது நியூசிலாந்துடன் நடந்த போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகளிலுமே வென்று 6 புள்ளிகளுடன் டீம்-சியில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் சூப்பர் 8 சுற்றுக்கான தகுதி பெற்ற அணியாகவும் மாறியுள்ளது.

இதே வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை ஒருநாள் போட்டிகளுக்கான தகுதி சுற்றில் படுதோல்வி அடைந்து லீக் போட்டிக்கு கூட செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போது அந்த மிகப்பெரிய சரிவிலிருந்து மீண்டு வந்து சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments