Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பாகிஸ்தானுக்கு வரவில்லையென்றால் அது பெரிய விஷயமே இல்லை – முன்னாள் வீரர் கருத்து!

vinoth
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (10:23 IST)
8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எப்படியும் இந்திய அணி கலந்துகொள்ளும் என கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது மீண்டும் பிசிசிஐ, பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதை ஏற்க மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இன்னும் குழப்பமான சூழலே நிலவி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் “இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து சாம்பியன்ஸ் கோப்பை தொடரை விளையாடினால் நாங்கள் வரவேற்போம். ஒருவேளை அவர்கள் வந்து விளையாடவில்லை என்றால் அது ஒன்றும் எங்களுக்கு பெரிய விஷயம் கிடையாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்தம் ஒரு சொட்டு மிச்சமிருந்தாலும்.. விடாமுயற்சி! போராடி தோல்வியடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

சதம் விளாசிய இஷான் கிஷன்.. சொல்லி அடித்த ஐதராபாத்! புதிய ரன் ரெக்கார்ட்!

இரக்கமில்லையா உனக்கு.. அடித்து வெளுக்கும் SRH! அரை சதம் விளாசிய RR பவுலர்ஸ்!

ஐதராபாத் - ராஜஸ்தான் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் விவரங்கள்..!

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

அடுத்த கட்டுரையில்
Show comments