Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியுடனான நட்பு எப்படி உள்ளது?... தோனி பகிர்ந்த தகவல்!

vinoth
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (10:14 IST)
இந்திய கிரிக்கெட் உருவாக்கிய மிகச்சிறந்த கேப்டனாகவும் கிரிக்கெட்டராகவும் தோனி உள்ளார். சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் இப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தவிர்த்து மற்ற நேரங்களில் விவசாயம், நண்பர்களோடு சுற்றுப்பயணம் என மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கழித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் காலடி எடுத்து வைத்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில் “இந்திய அணியில் உங்களோடு நீண்ட நாட்கள் விளையாடிய கோலியோடு இப்போது உங்கள் நட்பு எப்படி உள்ளது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘நான் கோலியோடு நீண்ட ஆண்டுகள் சேர்ந்து விளையாடினேன். இப்போது நாங்கள் அதிகமாக சந்தித்துக் கொள்வதில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் சந்தித்து நடப்பு விஷயங்கள் பற்றி உரையாடுவோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments