Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 23 April 2025
webdunia

தொடர் புறக்கணிப்பு… இன்ஸ்டாவில் நம்பிக்கையோடு பதிவிட்ட சஞ்சு சாம்சன்!

Advertiesment
சஞ்சு சாம்சன்
, புதன், 20 செப்டம்பர் 2023 (07:55 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் சில போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெற்ற அவருக்கு அடுத்து ஆசியக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இதையடுத்து அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “இது எப்படி இருக்கிறதோ, அப்படியேதான் இருக்கிறது. நான் தொடர்ந்து முன்னோக்கி செல்லும் வழியை தேர்வு செய்கிறேன்” எனக் கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“பிரான்ச்சைஸ் கிரிக்கெட்டில் கிடைக்கும் பணத்துக்காகதான் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” – டிகாக் ஓபன் டாக்!