Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

vinoth
புதன், 15 மே 2024 (07:22 IST)
சில நாட்களுக்கு முன்னர் நடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி. இந்நிலையில் இந்த போட்டி முடிந்ததும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ராகுலிடம் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்த காட்சி வெளியாகி இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் கோயங்காவுக்கு எதிராகவும் ராகுலுக்கு ஆதரவாகவும் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

இதனால் ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளதாகவும், அடுத்த சீசனில் அவர் லக்னோ அணிக்காக விளையாட மாட்டார் எனவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் ராகுலை அழைத்து தன்னுடைய வீட்டில் விருந்து வைத்து ‘நாங்கள் சமாதானம் ஆகிவிட்டோம்’ என அறிவித்தார் கோயங்கா.

நேற்று டெல்லி அணிக்கெதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்தது. இதனால் அந்த அணியின் ப்ளே அஃப் வாய்ப்பு 10 சதவீதத்துக்குக் கீழ் சென்றுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஒரு நாடகீயத் தருணம் நடந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. நேற்று பீல்டிங் நின்ற கே எல் ராகுல் ஷேய் ஹோப் அடித்த பந்தை சிறப்பான டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். இந்த அபாரமான கேட்சுக்கு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா எழுந்து நின்று கைதட்டி தன்னை ஒரு பக்கா ஜெண்டில்மேன் எனக் காட்டிக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மித், டிராவிஸ் ஹெட் அபார சதங்கள்.. மின்னல் வேகத்தில் உயர்ந்த ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விழும் விக்கெட்டுக்கள்: ஆஸ்திரேலியா ஸ்கோர் விவரம்..!

கொட்டித் தீர்த்த் மழை… மழை காரணமாக கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்…!

மழையால் பாதிக்கப்பட்ட பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி!

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு.. ஆஸி நிதான ஆட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments