Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

vinoth
வெள்ளி, 16 மே 2025 (09:02 IST)
சமீபத்தில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து அதிர்ச்சியைக் கிளப்பினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ள்ளது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். ஏனென்றால் அவரின் உடல்தகுதிக்குக் குறைந்தது இன்னும் 4 ஆண்டுகளாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கலாம்.

கோலியின் ஓய்வுக்கு சில நாட்கள் முன்னர்தான் ரோஹித் ஷர்மாவும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் இந்திய அணியில் இரண்டு அனுபவம் மிக்க வீரர்கள் ஒரே நேரத்தில் இல்லாமல் போனதால் அணியில் வெற்றிடம் விழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இது பற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் “ரோஹித், கோலி இல்லாததால் பதற்றமடைய வேண்டியதில்லை. இதற்கு முன்பாக சச்சின், டிராவிட், கங்குலி மற்றும் லக்‌ஷ்மன் ஆகியோர் ஓய்வை அறிவித்தபோதும் இதே போன்ற பதற்றம் நிலவியது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்திய அணி நம்பர் 1 இடத்துக்கு வந்தது. அதே போல ரோஹித், கோலியின் இடத்தை நிரப்ப சில காலம் ஆகும். ஆனால் இந்தியா உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

‘டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா’ எனக் கதறும் பவுலர்கள்.. 52 பந்துகளில் சதமடித்து அசத்திய சூர்யவன்ஷி!

ஒரு டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அதிக ரன்கள்… கவாஸ்கரின் 50 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்!

ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள்… இந்திய அணி படைத்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments