Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

vinoth
சனி, 21 ஜூன் 2025 (13:57 IST)
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

நேற்று முதல் நாளில் எதிர்பார்த்ததை விட இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 359 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதன் மூலம் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் இல்லாததால் இந்திய அணித் தடுமாறுமோ என்ற சந்தேகத்துக்கு பதிலளித்துள்ளனர்.

இந்த போட்டியில் வர்ணனையாளராகப் பணியாற்றிய சஞ்சய் மஞ்சரேக்கர் போட்டியின் போது வேண்டுமென்றே கோலியை சீண்டும் விதமாகப் பேசி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடி வந்தபோது மஞ்சரேக்கர் ” இருவருமே ஆஃப் சைடில் வரும் பந்துகளை சரியாகக் கணித்து விட்டு விளையாடுகின்றனர். ஆனால் இதற்கு முன்பு இருந்த ஒரு பேட்ஸ்மேனாக இருந்தால் அந்த பந்துகளை ஆடி விக்கெட்டை இழந்திருப்பார்” எனப் பேசினார். மறைமுகமாகக் கோலியை தாக்கிய அவரின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற ஒரு முன்னாள் வீரரை ஏன் அவர் இல்லாதப் போட்டியில் தாக்கிப் பேசவேண்டும் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments