Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விக்குக் காரணமான ரிஷப் பண்ட்டின் தவறு.. சஞ்சய் கோயங்காவின் லுக்.. நெட்டிசன்கள் அமலி!

vinoth
செவ்வாய், 25 மார்ச் 2025 (08:52 IST)
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில், லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில், லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மிட்சல் மார்ஷ் மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரும் அபாரமாக விளையாடி, தலா 72 மற்றும் 75 ரன்கள் எடுத்தனர்.

இதனை அடுத்து, 210 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி ஆரம்பத்திலேயே முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், இம்பேக்ட் பிளேயராக வந்த அஷுடோஷ் சர்மா அபாரமாக விளையாடி 62 ரன்கள் சேர்த்து போட்டியை லக்னோ அணியிடம் இருந்து தட்டிப் பறித்தார்.

இந்த போட்டியின் இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவைப்பட மோஹித் ஷர்மாவின் ஸ்டம்பிங் ஒன்றை ரிஷப் பண்ட் மிஸ் செய்தார். அதை அவர் சரியாக செய்திருந்தால் போட்டியை டெல்லி வென்றிருக்கும். ரிஷப் பண்ட் அந்த ஸ்டம்பிங்கை மிஸ் செய்ததை கேலரியில் இருந்த அணி உரிமையாளர் சஞ்சய் கோயங்கா முறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தார். இதை வைத்து தற்போது நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்தபடி மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற டெல்லி.. பூரன், மார்ஷ் அதிரடி வீண்..!

கோலிக்கு 50 ரன்லாம் பத்தாது.. அவருக்கு ஜெயிக்கணும் அவ்ளோதான்! - எம்.எஸ்.தோனி!

கிரிக்கெட் மேட்ச் நடந்து கொண்டிருந்தபோது வங்கதேச வீரருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

ஜோஃப்ரா ஆர்ச்சரை இனவாத ரீதியில் தாக்கிப் பேசினாரா ஹர்பஜன் சிங்?.. எழுந்த சர்ச்சை!

ருதுராஜ் கையில் இருந்த மர்ம பொருள்? பால் டேம்பரிங் செய்ததா CSK? - பரபரப்பு வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments