Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த கிரிக்கெட் வீரரை மறுமணம் செய்கிறாரா சானியா மிர்சா? இணையத்தில் பரவிய வதந்தி!

Advertiesment
இந்த கிரிக்கெட் வீரரை மறுமணம் செய்கிறாரா சானியா மிர்சா? இணையத்தில் பரவிய வதந்தி!

vinoth

, வியாழன், 1 பிப்ரவரி 2024 (07:03 IST)
இந்திய டென்னிஸ் வீரர் சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் தம்பதிகள் துபாயில் வசித்து வருகின்றனர். இருவரும் தங்கள் சொந்த நாட்டுக்காக விளையாடினர்.

இதையடுத்து இருவருமே தற்போது தங்கள் துறையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இந்நிலையில் இப்போது சானியா மிர்சா ஷோயப் மாலிக் தம்பதிகள் பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்தி படுவது மாலிக் சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சானியா மிர்சா இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை மறுமணம் செய்து கொள்ள உள்ளதாக திடீரென ஒரு தகவல் பரவியது. இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது போல ஒரு புகைப்படமும் இணையத்தில் பரவியது. ஆனால் இந்த தகவல் போலியானது என்று இப்போது தெரியவந்துள்ளது. சானியா மிர்சா போலவே முகமது ஷமியும் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலியை ஓவர்டேக் செய்வாரா ஷுப்மன் கில்? பீட்டர்சனின் கணிப்பு!