Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி காக் இருப்பது மண்டேலாவின் தென் ஆப்பிரிக்காவில் இல்லை… சல்மான் பட் கண்டனம்!

Advertiesment
டி காக் இருப்பது மண்டேலாவின் தென் ஆப்பிரிக்காவில் இல்லை… சல்மான் பட் கண்டனம்!
, புதன், 27 அக்டோபர் 2021 (17:11 IST)
நிறவெறிக்கு எதிராக தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் மண்டியிட்டு சபதம் எடுத்தபோது குயிண்டன் டி காக் மட்டும் அதை செய்யவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை லீக் சுற்றில் மோதியது. இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு கொஞ்சம் முன்பாக அணியில் டிகாக் விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ரிசா ஹென்ரிக்ஸ் அணியில் சேர்ந்துள்ளார்.

நிறவெறிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணிவீரர்கள் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் ஒரு காலை மடக்கி மனித குல ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக உறுதி மொழி எடுப்பதாக முடிவு செய்தனர். ஆனால் அதைக் கடந்த போட்டியில் டிகாக் செய்யவில்லை. அதனால் அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே மோதல் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பலரும் டி காக்குக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் ‘அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் இனவெறிக்கு எதிராக உறுதிமொழி எடுக்கும் போது டி காக் செய்தது புதிதாக உள்ளது. இதை செய்யாததின் மூலம் அவர் பிரிவினையை அதிகப்படுத்துகிறார். கருப்பின மற்றும் வெள்ளையின மக்கள் அதிகளவில் வசிக்கும் தென்னாப்பிரிக்காவில் வாழ்பவர் அவர். கண்டிப்பாக அவர் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்காவில் வாழவில்லை. அனைவரும் சமம் என்பதே மண்டேலாவின் செய்தி.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்துக்கள் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்டார் வக்கார் யூனிஸ்!