Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சின் டெண்டுல்கருக்கு அறுவை சிகிச்சை

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (10:44 IST)
சச்சின் டெண்டுல்கர் சில காயங்களின் பிரச்சனைகளால், அவதிபட்டு வந்த நிலையில் தற்போது  தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.


 
கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றதை தொடர்ந்து ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்ட சச்சின், இந்தியாவில் விளையாட்டுத் துறை மேம்படுத்துதல் உட்பட பல சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தார்.

இந்நிலையில், சில காயங்களின் பிரச்சனைகளால், அவதிபட்டு வந்த சச்சின்,  தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதுகுறித்து சச்சின் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  “ஓய்வு பெற்ற பிறகும் சில காயங்கள் பிரச்சனைகளாக உருவெடுத்தது, ஆதலால், முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது ஒய்வு எடுத்து வருவகிறேன். மிக விரைவில் மீண்டு வந்து எனக்கு பிடித்த விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1989-ம் ஆண்டு கிரிக்கெட் கிரிக்கெட்டில் கால் பதித்து பல உலக சாதனைகளை நிகழ்த்திய டெண்டுல்கர். 2013-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி கிரிக்கெட்டிலிருந்த ஒய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments