என் மகனின் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல்: சச்சின் பெருமிதம்!

Webdunia
வெள்ளி, 8 ஜூன் 2018 (11:53 IST)
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் 19 வயதுக்குள்ளான இந்திய அணியில் தற்போது இடம்பெற்றுள்ளார். 
 
வரும் ஜூலை மாதம் இந்த அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில் அர்ஜுன் தெண்டுல்கரும் இலங்கை அணியுடன் மோதவுள்ள வீரர்களில் ஒருவர். 
 
அர்ஜுன் தெண்டுல்கர் இடதுகை மீடியம் பேஸ் பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகன் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதை குறித்து சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, 
 
19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் என் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அர்ஜூன் வெற்றியடைய நானும், எனது குடும்பத்தினரும் பிரார்த்திப்போம். அர்ஜூனின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து போட்டியில் மழை பெய்தால்? இறுதி போட்டிக்கு செல்லும் அணி எது?

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம் எங்கள் ஹோம் கிரவுண்ட்.. கோப்பையை வெல்வோம்: தென்னாப்பிரிக்கா

சஞ்சு சாம்சனின் 97 ரன்களை விட ஷிவம் துபே அடித்த 2 பவுண்டரிகள் முக்கியமானது: கம்பீர்

திருவனந்தபுரத்தின் மகன் சஞ்சு சாம்சன்.. காங்கிரஸ் எம்பி பெருமிதம்..!

இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாது என கூறிய பாகிஸ்தான் வீரர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments