Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு நேரத்தில் மெட்ரோ ஊழியர்களுடன் கிரிக்கெட் விளையாடிய சச்சின் (வைரல் வீடியோ)

Webdunia
செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (13:20 IST)
மகாராஷ்டிராவின் பந்த்ரா பகுதியில் இரவு நேரத்தில், சிலரோடு சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
கிரிக்கெட்டிற்காக தனது வாழ்க்கையையே அற்பணித்தவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் தந்தை என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், பல இன்னல்களுக்கு இடையே பல சாதனைகளை படைத்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது வாழ்க்கை வரலாறு பல இளைஞர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற உத்வேகத்தை கொடுக்கிறது.
இந்நிலையில் மகாராஷ்டிராவின் பந்த்ரா பகுதியில் மெட்ரோ பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இப்போது அவ்வழியாக சென்ற சச்சின், தனது காரில் இருந்து இறங்கி, அந்த ஊழியர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார். இதனை சற்றும் எதிர்பாராத அவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். சற்று நேரம் கிரிக்கெட் விளையாடி விட்டு, அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு சச்சின் விடைபெற்றார்.
                                                         நன்றி: CRICKET 360

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments