சச்சின் உருவாக்கிய ஐபிஎல் 2022 அணி… யார் யாருக்கு இடம்?

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (11:22 IST)
ஐபிஎல் 2022 ஆம் ஆண்டு தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

உலக அளவில் மிகப்பெரிய டி 20 கிரிக்கெட் லீக் தொடராக இருந்து வருகிறது. இதில் கிடைக்கும் பணம் பல வீரர்களுக்கு அவர்களின் ஆண்டு ஊதியத்தை விட அதிகமாக இருக்கும். தொடர்ந்து 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவிட் பெருந்தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக முழுமையாக இந்தியாவில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் இந்தியாவில் முழு ஐபிஎல் தொடரும் நடந்தது. இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது. அறிமுகமான முதல் சீசனிலேயே அந்த அணி கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில் இந்த சீசனில் பல அணிகளை சேர்ந்த வீரர்கள் சிறப்பாக விளையாடிய நிலையில் தன்னுடைய கனவு ஐபிஎல் அணியை சச்சின் உருவாக்கியுள்ளார். அந்த அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமித்துள்ளார். அணியில் உள்ள வீரர்களாக  ஷிகார் தவான், ஜோஸ் பட்லர், கே எல் ராகுல்,டேவிட் மில்லர், லியாம் லிவிங்ஸ்டன்,  தினேஷ் கார்த்தி, ரஷீத் கான், முகமது ஷமி, பூம்ரா, சஹால் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments