சச்சினையும் விடாத டீப் ஃபேக் சர்ச்சை… பதறியடித்து விளக்கம்!

vinoth
செவ்வாய், 16 ஜனவரி 2024 (07:47 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா சம்மந்தப்பட்ட,  ஏஐ தொழில் நுட்பத்தால் ஆபாசமாக உருவாக்கப்பட்ட DeepFake Edit வீடியோ இணையதளத்தில் வைரலாகியது சர்ச்சையைக் கிளப்பியது. ராஷ்மிகா மட்டுமில்லாமல் வேறு சில பாலிவுட் நடிகைகளையும் ஆபாசமாக சித்தரித்து இதுபோன்ற டீப் ஃபேக் வீடியோக்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இம்முறை சச்சின் டெண்டுல்கர் பற்றிய ஒரு டீப் ஃபேக்  வீடியோ இணையத்தில் பரவ அதைப் பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார் சச்சின். அந்த வீடியோவில் சச்சின் தன்னுடைய மகள் சாரா டெண்டுல்கர் ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக பணம் சம்பாதித்து வருவதாகவும் ரசிகர்களும் அதைப் பயன்படுத்தி சம்பாதிக்கலாம் என்றும் அவர் கூறுவது போல அந்த வீடியோ அமைந்தது.

இந்த வீடியோ பரவலாக சமூகவலைதளங்களில் பரவிய நிலையில் “அது பொய்யான ஒன்று என சச்சின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ரசிகர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற வீடியோக்களால் ஏமாற்றப்படுவீர்கள். இந்த வீடியோவால் நானும் என் குடும்பமும் மன வருத்தம் அடைந்துள்ளோம்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை U-19 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி கேப்டன் இல்லையா?

இந்திய மகளிர் அணியின் அடுத்த இலக்கு டி20 உலகக்கோப்பை.. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்துடன் மோதல்..!

இந்திய வீரர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த முன்னாள் கேப்டன் தோனி!

கம்பீர் மீது தவறு இருக்கலாம்… ஆனால் முழுவதும் அவரே காரணமா? –அஸ்வின் ஆதரவு!

WPL மெகா ஏலம் 2026: அதிக விலைக்கு ஏலம் போன தீப்தி ஷர்மா.. ஏலம் போகாத ஒரே வீராங்கனை ஆஸ்திரேலியா அணியின் கேப்டன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments