Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணியில் சில வீரர்களுக்கு காய்ச்சல்… காலை வரை பிளேயிங் 11 தெரியவில்லை – சிஎஸ்கே கேப்டன் ருத்து!

vinoth
திங்கள், 6 மே 2024 (07:10 IST)
நேற்று நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய நிலையில் சென்னை அணி சூப்பர் வெற்றியை பெற்றது. இந்தபோட்டியில் சென்னை அணி முதலில் பேட் செய்து 169 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே பெற்று 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டி முடிந்த பின்னர் பேசிய சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் “இந்த ஆடுகளம் மெதுவாக இருக்கும் என நினைத்தோம். நல்ல தொடக்கம் கிடைத்ததால் 200 ரன்கள் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் விக்கெட்கள் விழுந்ததால் இதுவே நல்ல ஸ்கோர்தான் என்று ஆடினோம்.

எங்கள் அணியில் சில வீரர்களுக்கு காய்ச்சல். அதனால் வீரர்களை எந்த ஆர்டரில் இறக்குவது என்றே தெரியவில்லை. அதனால் இன்று (நேற்று) காலை வரை பிளேயிங் லெவன் அணியே உறுதியாகவில்லை. இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒன்று” எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இருந்து முழுவதும் விலகுகிறாரா ஹேசில்வுட்?

ஃபாலோ ஆனைத் தவிர்த்ததைக் கொண்டாடிய கம்பீரும் ரோஹித்தும்… என்ன கொடும சார் இது?

ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.. 10 விக்கெட்டில் அசத்தும் பும்ரா-ஆகாஷ் தீப்

வெற்றியுடன் விடைபெற்றார் நியுசிலாந்தின் டிம் சவுத்தீ!

உணவு இடைவேளையின் போது பயிற்சி மேற்கொண்ட கோலி…!

அடுத்த கட்டுரையில்
Show comments