Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விக்குக் காரணம் இதுதான்… சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட்!

vinoth
சனி, 6 ஏப்ரல் 2024 (08:03 IST)
சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும் கடைசி கட்டத்தில் ரன்கள் குவிக்க முடியாமல் தினறியது.

இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிவம் துபே அதிகபட்சமாக 45 ரன்கள் சேர்த்தார். இந்த எளிய இலக்கோடு களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. அந்த அணியின் அபிஷேக் ஷர்மா 12 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். இதையடுத்து வந்த மார்க்ரம், டிராவிஸ் ஹெட் ஆகியோரும் சிறப்பாக விளையாட அந்த அணி 19 ஆவது ஓவரில் இலக்கை எட்டியது.

தோல்விக்குப் பின்னர் பேசிய சி எஸ் கே அணியின் கேப்டன் ருத்துராஜ் “விக்கெட் தோய்வாக இருக்கும் என்று தெரிந்துதான் வந்தோம். ஆனால் எங்கள் இன்னிங்ஸின் கடைசி 10 ஓவர்களில் நாங்கள் ரன்கள் குவிக்க தவறிவிட்டோம். இன்னும் 15 ரன்கள் கூடுதலாக எடுத்திருக்க வேண்டும். அதே போல நாங்கள் பந்துவீசும் போது பவர்ப்ளேயில் அதிக ரன்களைக் கொடுத்துவிட்டோம். அதன் பின்னர் நாங்கள் அபாரமாக செயல்பட்டு கடைசிவரை போட்டியைக் கொண்டு சென்றோம்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ்: யுவராஜ் சிங் கேப்டன்.. முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராகவா?

அடுத்த கட்டுரையில்
Show comments