Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி எஸ் கே பவுலர்கள் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்கின்றனர்… கேப்டன் ருத்துராஜ் ஆதங்கம்!

vinoth
சனி, 20 ஏப்ரல் 2024 (07:48 IST)
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி தோனி, ரஹானே மற்றும் ஜடேஜா ஆகியோரின் நிறப்பான ஆட்டத்தால் 176 ரன்களை சேர்த்தது.

இதன் பின்னர் ஆடிய லக்னோ அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகச்சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். டிகாக் 54 ரன்களும் கே எல் ராகுல் 82 ரன்களும் சேர்க்க, 19 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே எல் ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டது.

தோல்விக்குப் பின்னர் பேசிய சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் “இந்த பிட்ச்சில் பேட்டிங்கில் என்ன முடியுமோ அதை செய்தோம். ஆனாலும் நாங்கள் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம் என நினைக்கிறேன். பவர் ப்ளேக்கு பிறகு சிறப்பாக கொண்டு செல்லமுடியவில்லை.

சிஎஸ்கே பவுலர்கள் பவர்ப்ளே ஓவர்கள் விக்கெட்களை எடுக்காமல் சொதப்பி வருகின்றனர். அதில் முன்னேற்றம் காணவேண்டும். அதுதான் எதிரணியை அழுத்தத்தில் தள்ளும்.   அடுத்த போட்டி லக்னோவுக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடக்க உள்ளது. அதில் தவறுகளை சரி செய்வோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்புகிறாரா டிவில்லியர்ஸ்… அவரே கொடுத்த அப்டேட்!

டி 20 போட்டிகளில் இனி இவர்தான் விக்கெட் கீப்பர்… சூர்யகுமார் யாதவ் சொன்ன பதில்!

ஜெர்ஸியில் பாகிஸ்தான் பெயரை அச்சடிக்க மறுக்கும் பிசிசிஐ.. வலுக்கும் எதிர்ப்புகள்!

ரோஹித் ஷர்மாவுக்கு சிறப்பு சலுகை… ரஞ்சி போட்டிக்காக மைதானத்தில் கூடுதல் இருக்கை!

எனக்கு ஏன் வலிக்க வேண்டும்?... சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இடம் பெறாதது குறித்து சூர்யகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments