Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ரோஹித் ஷர்மா!

vinoth
புதன், 15 ஜனவரி 2025 (13:41 IST)
அடுத்த மாதம் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இதனால் தொடர் ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட உள்ளது.

அதன்படி இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் உள்ள ’துபாய் இண்டர்நேஷனல் மைதானத்தில்’ நடக்கவுள்ளது. லீக் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியும் அந்த மைதானத்தில் நடக்கும் என சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த போட்டிகளும் பாகிஸ்தானில் நடக்காது.

இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தொடக்க விழா பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. அந்த தொடக்க விழா நிகழ்ச்சிக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா சென்று கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments