Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே எல் ராகுல் கையால் கோப்பையை வாங்கவைத்த ரோஹித் ஷர்மா!

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (08:34 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அதிரடியாக ஆடி 352 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஏற்கனவே தொடரை இந்திய அணி வென்றுவிட்ட நிலையில் இந்த தோல்வி ஆஸி அணிக்கு வெறும் ஆறுதல் வெற்றியாக மட்டுமே அமைந்தது.

இந்நிலையில் 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்திய அணி. இந்நிலையில் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் கேப்டனாக இருந்து தொடரை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த கே எல் ராகுல் கையால் கோப்பையை வாங்க வைக்க வேண்டுமென்று விரும்பிய கேப்டன் ரோஹித் ஷர்மா அவரை அழைத்து கோப்பையை வாங்கினார்.

இது சம்மந்தமான வீடியோ துணுக்குகள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்வுக்குழு மீட்டிங்கை பிசிசிஐ நேரலை செய்ய வேண்டும்: மனோஜ் திவாரி கோரிக்கை..!

மகளிர் உலகக் கோப்பை… பெங்களூருவில் இருந்து நவி மும்பைக்கு மாற்றம்!

சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங்கில் எந்த இடம்? குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

அக்ஸர் படேல் என்ன தப்பு செஞ்சார்?... அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் –முன்னாள் வீரர் ஆதங்கம்!

புரோ கபடி லீக் சீசன் 12: புதிய பலத்துடன் தயாராகி வருகிறது தமிழ் தலைவாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments