Publish Date: Mon, 12 Jun 2023 (07:43 IST)
Updated Date: Mon, 12 Jun 2023 (08:11 IST)
இந்திய அணி இரண்டாவது முறையாகவும் இறுதிப் போட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இழந்துள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.
வெல்வதற்கு அனைத்து வாய்ப்புகள் இருந்தும் அணித் தேர்வு உள்ளிட்ட சில விஷயங்களில் இந்திய அணி செய்த சிறு தவறுகளால் போட்டியைத் தோற்றதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அணியில் அஸ்வினை எடுக்காதது குறித்து கேப்டன் மீதும் பயிற்சியாளர் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசியுள்ள இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா “டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டியை ஒரே போட்டியாக நடத்தாமல், மூன்று போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும். மேலும் இறுதிப் போட்டி எப்போதும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் மட்டுமே நடக்கக் கூடாது” என இரு ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.